Aran Sei

டெல்லியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – புள்ளி விவரங்களை வெளியிட்டது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

டெல்லியில் கடந்த ஆண்டு கொரோனாத் தொற்றின் காரணமாகக் குற்ற எண்ணிக்கைக் குறைந்திருந்த போதும் கூட,  பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறையும் அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல் வழியாகத் தெரியவந்துள்ளது.

மேலும், 2019 –  2020 க்கும் இடைப்பட்டக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல் வழியாக அறிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 2.4  லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் [அல்லது] நாளொன்றுக்கு சுமார் 650 வழக்குகள் வீதம் டெல்லி காவல்துறை வழக்குகளைப்  பதிந்துள்ளது.

இதேவேளையில், பெங்களூரில் கடந்த ஆண்டு 19,964 வழக்குகளும், மும்பையில் 50,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும், 2019 ஆம் ஆண்டு 5,900 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால்,    2020 ஆம் ஆண்டு கடத்தல் வழக்குகள் 4,062 எனக் குறைந்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஒட்டுமொத்தமாக  கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும் டெல்லியில் அதிகளவிலான  கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், இந்தப் புள்ளிவிவரத்தின் வழியாக பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி விளங்குவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Source: The indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்