Aran Sei

2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை

டந்த 2020 ஆம் ஆண்டு 66,01,285 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2௦19 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்குகளைவிட 28 [51,56,158] விழுக்காடு அதிகம் என்று தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின்அறிக்கை வழியாகத் தெரியவந்துள்ளது.

இதில், 42,54,356 குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், 23,46,929 குற்றங்கள்  சிறப்பு மற்றும் மாநில  சட்டங்களின் கீழும் பதியப்பட்டுள்ளன.

2௦19 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்குகளைவிட, 2020 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் 31.9% அதிகரித்துள்ளதாகவும், சிறப்பு மற்றும் மாநில  சட்டங்களின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் 21.6% அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேபோன்று,  குற்ற விகிதமானது கடந்த 2௦19 ஆம் ஆண்டு ஒரு லட்சம்  பேருக்கு  385.5 ஆக இருந்த நிலையில்,  2௦19 ஆம் ஆண்டு ஒரு லட்சம்  பேருக்கு 487.8 ஆக உயர்ந்துள்ளது என்றும்  தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும்,2௦19 ஆம் ஆண்டைவிட கொலை வழக்குகளின் எண்ணிக்கை 1 விழுக்காடு அதிகரித்து  மொத்தமாக 29,193 வழக்குகளும்  பதிவாகியுள்ளன.

இதேபோன்று, 2020 ஆம் ஆண்டில்  பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2௦19 ஆம் ஆண்டை விட 8.3% குறைவாகும்.

Source: Crime in India – 2020 SNAPSHOTS 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்