Aran Sei

கர்நாடகாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் முறைகேடு – பாஜக எம்.எல்.ஏவிற்கு தொடர்பா என காவல்துறை விசாரணை

ர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, நீதிமன்றத்தில் முறையிடுவேன்’ – மம்தா பானர்ஜி

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாபுவிற்கும், பாஜகவை சார்ந்த பொம்மனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ரெட்டிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருவதாகவும் கர்நாடக மாநில குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இந்த விவகாரத்தில் பாபு இடைத்தரகராக செயல்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை ஏற்கனவே கைது செய்துள்ளதாகவும் குற்றப்பிரிவு காவல்துறை கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வேந்தாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – பட்டினி போராட்டம் அறிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்கள்

இந்நிலையில்,கைது செய்யப்பட்டுள்ள நபரை வரும் மே 31 வரை விசாரணைக் காவலில் விசாரிக்க உள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள்,கட்டுப்பட்டு மைய அதிகாரிகள் ஆகியோர் குறித்து விசாரிப்படவுள்ளதாகவும் குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்