Aran Sei

அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால் பாதிக்கப்படும் மின்மயான ஊழியர்கள் – லக்னோவில் ஓய்வின்றி 19 மணிநேரம் உழைக்கும் அவலம்

க்னோவில் கொரோனாத் தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் 19 மணிநேரம் பணியில் ஈடுபடுகிறோம் என  மின்மயானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தலைநகர் லக்னோவில் நேற்று 1,333 பேர் கொரனோத் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த வாரம் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறதா தமிழகம் – ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

இதுகுறித்து தெரிவித்துள்ள மின்மயான ஊழியர் முன்னா, “நேற்றைய தினம் மட்டும் 23 சடலங்களை எரிக்க 19 மணி நேரம் ஆனது “என்று தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி  செய்தி கூறுகிறது.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பணியிடத்திலேயே கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பு

ஒரு உடலை எரிக்க 45 நிமிடங்கள் ஆகுமென்றும், தங்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படாததால் பிளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதாகவும், அதிகரிக்கும் உயிரிழப்புகளால் சாப்பிட, தூங்க நேரம் இல்லை என்றும் முன்னா தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ”கொரோனாத் தொற்று ஏற்பட்டிடாமல் இருக்க முகக்கவசம் அணிவதையும் இறைவனை வணங்குவதையும் செய்து வருகிறேன்.  அதுமட்டுமே என்னால் முடிந்தது” என மின்மயான ஊழியர் முன்னா தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி  செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்