Aran Sei

‘புதிய நாடாளுமன்ற கட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி செலவாகலாம்’- ஒன்றிய பொதுப்பணித் துறை தகவல்

ஃகு, மின்னணு சாதனங்கள் போன்றவற்றின் செலவுகள் உயர்வதால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இது தொடர்பாக, ஒன்றிய பொதுப்பணித் துறை (சிபிடபில்யூடி) மக்களவை செயலகத்தின் ஒப்புதலைப் பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான, மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு, புதிய நாடாளுமன்றம் மற்றும் அரசு கட்டடங்கள் கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஒன்றிய பொதுப்பணித்துறை முன்வைத்த இந்த வரைவுத் திட்டத்தில், ஒன்றிய செயலக கட்டடங்கள், ஒன்றிய கருத்தரங்க மையம், பிரதமருக்கான இல்லம், சிறப்புப் பாதுகாப்புப் படை இல்லம், குடியரசு துணைத் தலைவருக்கான சிறப்பு வளாகம் ஆகியவை அடங்கும்.

‘புதிய நாடாளுமன்றம் கட்டும் பணத்தில் தடுப்பு மருந்துகளை வாங்கியிருக்க வேண்டுமல்லவா’ – பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

இதன் மொத்த கட்டிட பரப்பளவு 17.21 லட்சம் சதுர மீட்டர். இதற்காக, 4.58 லட்சம் சதுரமீட்டர் அளவிலான தற்போதுள்ள கட்டுமானங்கள் இடிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு, புதிய நாடாளுமன்ற திட்டப்பணிகள் டாடா நிறுவனத்திற்கு ரூ.971 கோடிக்கு வழங்கப்பட்டது.

இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் புதிய நாடாளுமன்ற பணிகள் முடிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடத்த ஒன்றிய திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளைக் கண்காணித்து வரும் ஒன்றிய பொதுப்பணித் துறை (சிபிடபில்யூடி), திட்டச் செலவை அதிகரிப்பதற்காக மக்களவை செயலகத்திடம் ஒப்புதலைக் கோரியுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

‘கொரோனா காலத்தில் நாடாளுமன்ற வளாகம் கட்டப்படுவதற்கு தடைவிதிக்க முடியாது’ – மனுதாரர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

திட்டச் செலவு மறுசீராய்வு செய்யப்பட்ட பிறகு, திட்டத்திற்கு தோராயமாக 1200 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

‘நில அதிர்வு மண்டலம் ஐந்து’-இன் (seismic zone 5) விதிமுறைகளின்படி, தற்போது கட்டடம் கட்டப்படுவதால், எஃகிற்கான செலவு அதிகரித்துள்ளதாக ஒன்றிய பொதுப்பணித் துறை சுட்டிக்காட்டியுள்ளதாக பிடிஐ கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அவை உறுப்பினர்களின் மேசைகளில் டேப்லெட்டுகள் உள்ளிட்ட நவீன  ‘ஒலி-ஒளி’ சாதனங்கள் அமைக்கப்படுவதால் மின்னணு சாதனங்களுக்கான செலவும் உயரும் என்றும் அதேபோல், அமைச்சர்களின் அறைகளில் உயர் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்