Aran Sei

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பதிலளித்த சட்ட அமைச்சர் – உரிமைமீறல் தீர்மானம் தாக்கல் செய்த சிபிஎம் எம்.பி

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்புவதற்கு காலக்கெடு வைக்க  முடியாது என கூறிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் பதிலிற்கு எதிராக உரிமைமீறல் தீர்மானத்தைக் கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையால் நியமிக்கப்பட்ட  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறு ஜான் பிரட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

இதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில்  ஒருங்கிணைந்த கூட்டு செயல்முறை இருப்பதால், காலியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவை தெரிவிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

”கொலீஜியம் 80 முன்மொழிவுகளை செய்துள்ளது. அதில், ஜூலை 1, 2020 ஆம் தேதியில் இருந்து ஜுலை 15, 2021 வரையிலான காலக்கட்டத்தில் 45 நியமனங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன” என பிரிட்டாஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் இணைகிறதா காங்கிரஸ் – திரிணாமூல் கூட்டணி? – மேற்கு வங்கத்தின் அரசியல் திருப்பங்கள்

அமைச்சர் அளித்துள்ள பதில் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என கூறிய பிரிட்டாஸ், “உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரைகளை ஒருமனதாக வலியுறுத்தினால், அதைப் பரிசீலித்து, 3 முதல் 4 வாரங்களுக்குள் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் கொலிஜீயத்தால் வலியுறுத்தப்பட்ட பல திட்டங்கள் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலவரையரைக்கு பின்பும் நிலுவையில் உள்ளது என்று நம்பத் தகுந்த வகையில் அறியப்படுகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

“அமைச்சரின் பதில் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக அவையை வேண்டுமென்றே  தவறாக வழி நடத்தியதால் உரிமை  மீறுலாகவும் உள்ளது” என ஜான் பிரிட்டாஸ்  தெரிவித்தார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்