Aran Sei

கேரளத்தில் சிபிஎம் தலைவர் கொடூரக் கொலை – முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் 4 பேர் உட்பட ஐவர் கைது

கேரள மாநிலம் பெரிங்கராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரை  கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான பி.பி.சந்தீப் குமார் கடந்த வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

முக்கிய குற்றவாளியும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருமான ஜிஷ்ணு சாத்தங்கரி (23), பிரமோத் (23), நந்து (24), முகமது பைசல் (22) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான அபி தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் மூன்று குற்றவாளிகள் ஆலப்புழா மாவட்டம் கருவாட்டாவில் இருந்தும், மற்றொரு குற்றவாளியான பைசல் திருவல்லாவில் உள்ள லாட்ஜில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விசாரித்ததைக் கொண்டும் செல்போன் டவர் இருந்த இடத்தைக் கொண்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மறைவிடங்கள் கண்டுபிடித்ததாக காவல்துறியினர் தெரிவித்துள்ளனர்.

அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பழங்குடியினர் – பட்டா நிலத்தில் குடிசைகளை அகற்றிய வனத்துறை

இந்நிலையில்,குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களென்றும், இந்த கொலைக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

இக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவல்லா நகராட்சி மற்றும் அதை ஒட்டிய ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகம், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

பாதிக்கப்பட்டவரின் உடலில் 11 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்களுடன் உயிரிழந்தவரின் உடல் ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்