Aran Sei

நூறுநாள் வேலைத்திட்டம்: ‘சீமான் ஒன்றிய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்’ – கே.பாலகிருஷ்ணன்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் வக்காலத்து வாங்குகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 3), புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர், “தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தால் விவசாயப் பணி பாதிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான்  அவதூறாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவரது பேச்சானது இத்திட்டத்தை முடக்க வேண்டுமென நினைக்கும் ஒன்றிய அரசுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் உள்ளது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும்போது கண்டுகொள்ளாத சீமான், தற்போது இந்தியா முழுவதும் 14 கோடி கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத் திட்டமாக உள்ள இத்திட்டத்தைக் குறைகூறுகிறார் என்று கே.பாலகிருஷ்னன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் பேசியதைத் தற்போது சீமான் பேசி வருகிறார் என்றும் இத்திட்டத்தை நகர்ப்புறங்களிலும் செயல்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்