Aran Sei

பெரம்பலூரில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிறுப்புகள் – தரத்தை ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக அரசிடம் கோரிக்கை

பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐஐடி/அண்ணா பல்கலை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 22), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், “கே.பி.பார்க் குடியிருப்புகளைப் போலவே இப்போது பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. தரமற்ற வீடுகளால் பண இழப்பு மட்டும் ஏற்படவில்லை, மிகப்பெரும் உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனவே, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐஐடி/அண்ணா பல்கலை நிபுணர்களையும், செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். எளிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.” என்று தமிழ் நாடு அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

உதிர்ந்து விழும் புளியந்தோப்பு மாற்றுக்குடியிருப்புகள் – முந்தைய ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீமான் வேண்டுகோள்

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்