Aran Sei

எழும்பூரில் 60 ஆண்டுக்கும் மேலாக வாழும் மக்கள் வெளியேற்றம்: மாற்று குடியிருப்புகள் உறுதி செய்யாமல் வெளியேற்றப்படுவதாக சிபிஎம் குற்றச்சாட்டு

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒட்டி 60 ஆண்டுகளாக மேலாக வாழந்துவந்த மக்களை தமிழ்நாடு அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா வெளியிட்ட அறிக்கையில், மக்கள் வலுக்கட்டாய வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தற்போது வழி தெரியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளார்.

“சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே  பேருந்து நிலையத்தை ஒட்டி 60 வருடங்களுக்கும் மேலாக வாழந்துவந்த மக்களை வலுக்கட்டாய முறையில் வெளியேற்றி கண்ணப்பர் திடல் அருகில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்கவைக்க அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மாற்று குடியிருப்புகள் உறுதி செய்யப்படாமல் கட்டாயமாக காவல்துறை உதவியோடு வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நடுரோட்டில் உடைமைகளை இழந்து வாழ்வுரிமைக்காக குரல் எழுப்பும் மக்கள். மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்குமா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்