Aran Sei

இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்கு செல்லும் ஷைலஜா டீச்சர் – வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Image Credits: The Indian Express

கேரள சட்டமன்றத்திற்கு மீண்டும் இரண்டாவது முறையாக மட்டனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். வரலாறு காணாத வகையில் 42 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 140 தொகுதியில், 95க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளும் இடது ஜனநாயக முன்னனி முன்னிலை வகிக்கிறது.

தமிழகத் தேர்தல் முடிவு: ஸ்டாலினின் வெற்றிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைப் பரிசளித்த உதயநிதி

இதில் முதலமைச்சர் பினராயி விஜயன் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேலும், மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், கேரளா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவருமான ஷைலஜா டீச்சர், மட்டனூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 45 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றியை அவர் பெற்றுள்ளார்.

கேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் இடது ஜனநாயக முன்னணி – முதல்முறையாக தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சாதனை

இந்த மாபெரும் வெற்றி அவர் கொரோனா தடுப்பு பணிகளில் மாநிலத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்கு கிடைத்த பரிசு என மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்