Aran Sei

‘கங்கனாவை பொறுத்தவரை சுதந்திரம் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மக்கள்மீது திணிப்பது’- சிபிஐ(எம்எல்) லிபரேஷன்

டிகர் கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று(நவம்பர் 13), கருத்து தெரிவித்துள்ள திபங்கர், “பத்மஸ்ரீ விருது பெற்ற உடனேயே, நடிகரும், பாஜக ஆதரவாளருமான கங்கனா ரனாவத், 1947-ல் நாடு வென்றது வெறும் பிச்சை என்றும், 2014-ல் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் வழியாகதான் உண்மையான சுதந்திரம் நம் நாட்டிற்கு கிடைத்தது என்றும் கூறி இருக்கிறார். அவர் கூறிய கருத்து, அனைவரின் தேசபக்தி உணர்வையும் புண்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“ஆர்எஸ்எஸ்-ன் அமைப்பின் சித்தாந்தவாதி கோல்வால்கர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை தோல்விகள் என்றும், அவர்களை இலட்சியவாதிகளாகக் கருதக்கூடாது என்றும் கூறியவர். சுதந்திரப் போராட்டத்தின் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது பேரழிவு என்றும் அவர் கூறியவர். கங்கனா ரணாவத்தைப் பொறுத்தவரை, காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலையடைவது அவமதிப்புக்குரிய விஷயமாகத் தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“அவரை பொறுத்தவரை சுதந்திரம் என்பது, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை உணவு, உடை, மதம் என நாட்டில் உள்ள எல்லாவற்றிலும் வன்முறையாக திணிப்பதுதான். கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறுவதே ஒன்றிய அரசு செய்ய வேண்டிய ஒன்று. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தையும் பெற்ற சுதந்திரத்தையும் அவமதிப்பவர்களை ஊக்குவித்து கொண்டாடும் அதேநேரம், ​​இந்திய சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் ஒன்றிய அரசு கொண்டாட முடியாது” என்று தீபாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்