Aran Sei

விவசாயிகளின் பாரத் பந்திற்கு சிபிஐ(மாவோயிஸ்டுகள்) ஆதரவு : மக்களும் இணைந்து போராட அழைப்பு

விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு துணை நிற்கும் வகையில், மார்ச் 26 அன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்புவிடுத்துள்ள பாரத் பந்திற்கு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்டுகள்) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

பீகார்-ஜார்க்கண்ட் சிறப்புப் பகுதி குழுவின் (எஸ்ஏசி) செய்தி தொடர்பாளர் ஆசாத் வெளியிட்ட செய்தி குறிப்பில், விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, அதை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சி இம்மூன்று மக்கள் விரோத சட்டங்களையும் கண்டிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தில் இணையுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அவற்றைத்(விவசாய சட்டங்கள்) திரும்பப் பெற வேண்டும் என்று நரேந்திர மோடி அரசை கட்டாயப்படுத்த இந்த இணைதல் உதவும். மார்ச் 26 அன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ள பாரத் பந்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும். அதற்கான முழு ஆதரவையும் சிபிஐ (மாவோயிஸ்டுகள்) கட்சி வழங்கும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சட்டத்திற்கு எதிராக மார்ச் 26-ல் பாரத் பந்த் – ஒருங்கிணையும் விவசாய சங்கங்கள்

மேலும், “மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு காரணம், அவை பெரிய தொழிலதிபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்பதால்தான். சிறு மற்றும் குறு விவசாயிகளை இப்போதிருக்கும் விவசாய நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. அவர்களை ஒரு சில பெரிய தொழிலதிபர்களின் வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறது அரசு.” என்று அவ்வறிக்கையில் சிபிஐ (மாவோயிஸ்டுகள்) கட்சி கூறப்பட்டுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்