Aran Sei

லக்கீம்பூர் வன்முறை: அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் – பிரதமருக்கு சிபிஎம் எம்.பி கடிதம்

க்கீம்பூர் வன்முறை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எலமரம் கரீம், விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி, அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 5), இவ்வன்முறைக் குறித்து பிரதமர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கரீம், “செப்டம்பர் 25 அன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதன் வழியாக, அனைத்து ஜனநாயக விதிமுறைகளையும் இந்நாட்டு மக்கள் மீதான தனது பொறுப்பையும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா அப்பட்டமாக மீறியிருக்கிறார். தனது மகன் சம்பந்தப்பட்ட இக்கொலைகளுக்கு விவசாயிகளை குற்றம் சாட்டி, இந்தக் கொடூரத்தை நியாயப்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

‘ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறி, பாஜக படுகொலை ராஜ்ஜியம் நடத்துகிறது’ – மம்தா குற்றச்சாட்டு

“இந்த விவகாரம் குறித்து விசாரணை பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். ஆகவே, காட்டுமிராண்டித்தனமான இக்கொடூர சம்பவத்திற்காக ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு நான் உங்களைக் கோருகிறேன். அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் மீதான இந்த தாக்குதல், உத்தரபிரதேச பாஜக அரசின் நிர்வாக சீர்குலைவையும் காட்டு ஆட்சியையுமே அம்பலப்படுத்துகிறது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்