பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கும் குற்றத்திற்கும் உடந்தையாக இருந்த அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துடைத்தெறிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், தர்மபுரி மாவட்டத்தில், நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய சீதாராம் யெச்சூரி, ”மக்கள், அவர்களின் வாழ்வாதாரம், அரசியலமைப்புச் சட்டம் என அனைத்து வகையிலும் பாஜக தாக்குதலைத் தொடுத்திருக்கும், இந்தச் சுழலில் நடைபெற இருக்கும், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
“பாஜகவின் ராகத்துக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கும் அதிமுக அரசாங்கம் தான் இந்தியாவிலேயே அதிகம் கடன் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கூட 60,000 கடனுடன் பிறந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இடது சாரிகளின் வலிமையே மக்கள் போராட்டங்கள்தான்’ – சீதாராம் யெச்சூரியோடு நேர்காணல்
”உழைக்கும் வர்க்கத்தின் மீது மோடி அரசு போரைத் தொடுத்துள்ளதாக கூறியுள்ள யெச்சூரி, மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள், தொழிலாளர்கள் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது எனப் பல்வேறு அழுத்தங்களைத் தருவதாக” தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி
”மோடி அரசு வெறுப்பின் மூலம் மக்களைப் பிளவுப்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து லவ் ஜிகாத் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி – சீதாராம் யெச்சூரி
”பிரதமர் மோடியின் தமிழ் பற்று ஒரு கபடநாடகம், அது மக்களைத் தவறாக வழிநடத்த பயன்படுத்தப்படுகிறது. அது ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கின்ற பிரதமரின் கொள்கைக்கே எதிரானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ”நாம் பல்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள், ஆனால் பாஜக அதை அதிமுக துணை கொண்டு அழிக்க நினைக்கிறது” என்று யெச்சூரி கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசாங்கம் கவிழ்ந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், பாஜக வெறும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சியைப் பிடித்ததுள்ளனர் என்றும், பாஜகவுக்கு பணம் தான் மூலதனம், மக்கள் செல்வாக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.
அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்
மேலும், மத்திய அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட பாஜக பயன்படுத்துவதாகவும் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.