திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மே 5 ஆம் தேதி திரிபுராவில் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள்மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை நேரில் சந்திக்க சென்றவர்கள்மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும்” எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது..
மக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.