Aran Sei

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை – குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

image credit : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேஸ்புக் பக்கம்

ரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தில், சாதிய வன்மத்துடன் தாக்கி பட்டியலின இளைஞர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தில் சாதிய வன்மத்தோடு நடைபெற்ற தாக்குதலில் அதே பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த அர்ஜூன், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களோடு தாக்குதலுக்குள்ளான மேலும் இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என சுட்டிக் காட்டியுள்ளார்.

அரக்கோணத்தை அடுத்த  சோகனூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த அர்ஜீன், சூர்யா, மதன், வல்லரசு, சவுந்தராஜன் ஆகிய  இளைஞர்களிடம், பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டுள்ளனர், அதற்கு நாங்கள் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களித்தோம் என அந்த இளைஞர்கள் பதிலளித்துள்ளனர்.

இதனையொட்டி இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மேற்கண்ட இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே, இரண்டு கிராமத்தினரிடையே பிரச்னைகள் இருந்துவந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே சாதிய வன்மத்துடன் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன.” என  அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காசி கயான்வாபி மசூதியின் கீழ் இந்து கோவிலுக்கான தடயங்கள் உள்ளதா – அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

”தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், அரக்கோணத்தில் நடந்துள்ள இந்தக் கொடூர சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு நாகரிக மக்கள் சமூகம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.” என அந்தக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட அர்ஜூன், சூர்யா ஆகியோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூபாய் 50 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 20 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டுமென வுற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிகாரில் ஐந்து பேர் படுகொலை – முக்கிய குற்றவாளியை பாஜக அரசு காப்பாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்து அதிகபட்ச  தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழக காவல்துறையையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “அரக்கோணம் இரட்டைக்கொலை: கொலையாளிகளான சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்!   தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10 இல் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் விசிக முகாம் செயலாளர் அன்பழகன் உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டு தேர்தல் பணியாற்றியதற்காக அதிமுக சாதிவெறியர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்