Aran Sei

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

த்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளன.

டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற தர்ம நாடாளுமன்றம்(தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பல இந்து மத சாமியார்கள் கண்டனத்திற்குரிய வகையில் பேசியுள்ளதோடு, சிறுபான்மை சமூகத்தினரை கொலை செய்யவும் அழைப்பு விடுத்தனர்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய்யும் ஹரித்வாரைச் சேர்ந்த குல்பஹர் கான் என்பவரும் ஹரித்வாரில் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஹரித்வார் காவல்துறை கூறியது.

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்து சாமியார்கள் – காவல்துறை வழக்குப் பதிவு

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி , தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையம் ஆகியவற்றிற்கு ஹரித்வார் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி கடிதம் எழுதியுள்ளார். இவ்விவகாரத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

“நம் நாட்டின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக உள்ளனர். அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்” என்று மௌலானா மஹ்மூத் மதானி கூறியுள்ளார்.

“புனித நகரமான ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வெறுப்பு பேச்சு மாநாட்டில்’ இந்துத்துவா தலைவர்களின் இனப்படுகொலை கருத்துகளை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இவ்வற்றை எல்லாம் கண்டு, இந்திய ஒன்றிய அரசு வாயை மூடிக்கொண்டு ஒரு பார்வையாளராகதான் இருக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தப்லிக் ஜமாத்தை விமர்சிப்பது இஸ்லாமை விமர்சிப்பதாக கருத முடியாது – மாரிதாஸ் வழக்கில் நீதிபதி கருத்து

ஹரித்வார் கூட்டத்தின் கருத்துக்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இப்பேச்சுகள் ரத்தத்தை உறைய வைக்கிறது. தற்போதுள்ள வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ், இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று பாஜகவைச் சேர்ந்த உத்தரகண்ட் முதலமைச்சரை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ, “வசுதைவ் குடும்பம் – உலகம் ஒரு குடும்பம் என்பதுதான் இந்தியாவின் பாரம்பரியம். நம் அரசியலமைப்பின் மதிப்பு மதச்சார்பின்மை. அனைத்து மதங்களுக்கும் மரியாதை தருவது. நமது முதன்மை அடிப்படை உரிமை என்பது சமத்துவத்திற்கான உரிமை. இத்தகைய மதவெறி எண்ணங்களும் கூட்டங்களும் இந்தியாவின் அடித்தளத்திற்கு எதிரானவை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “முனாவர் ஃபரூக்கி கூறாத நகைச்சுவைகளைக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு, இடைவிடாது தண்டிக்கப்படுகிறார். ஆனால் மறுபுறம், ஹரித்வாரில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வெளிப்படையாக அழைப்பு விடுத்த ‘தர்ம் சன்சத்’ உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகதான் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்