Aran Sei

‘ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை கைவிட்ட, மத்திய அரசின் பினாமி அதிமுக அரசு ’ – முத்தரசன் குற்றச்சாட்டு

ழைய ஓய்வூதியத் திட்டம், பூரண மதுவிலக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 24), திருப்பூர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “தமிழகத்தில் மத்திய அரசின் பினாமி அரசாகவே அதிமுக அரசு செயல்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கக் கூடாது என்பது மரபாகும். ஆனால், தேர்தலைக் கருத்தில் கொண்டு, முழுமையான பட்ஜெட்போல இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூட்டணியில் இருந்துகொண்டு, மத்திய அரசை விமர்சிப்பது ஏன்? – பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் கருத்து

“தமிழக மக்கள் மீது ரூ 5.70 லட்சம் கோடி கடனை சுமத்தியதுடன், ரூ 41 ஆயிரம்கோடி பற்றாக்குறை பட்ஜெட்டையும் சமர்ப்பித்துள்ளனர். அடுத்து வரும் அரசு பெரிய அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.” என்று முத்தரசன் சுட்டிகாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய தொழிலான பஞ்சாலை, பனியன் தொழிற்சாலைகளை பற்றி குறிப்பிடுகையில், “நூல் விலை உயர்வால் பனியன் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாளிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசே நூல்கொள்முதல் செய்து, நியாயமான விலையில் ஜவுளி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, பூரணமதுவிலக்கு உள்ளிட்டவை தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த பல்வேறு வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

‘பட்ஜெட்டில் வரலாற்றுப் பிழை; பள்ளிக் கல்வித்துறைக்கு நிதியே ஒதுக்காத அவலம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை அழைத்துப் பேசி, தீர்வுகாண வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்