Aran Sei

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்

ட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரை பொய்களால் ஆனது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பினோய் விஸ்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று(ஜனவரி 31), நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றியுள்ள உரையில் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முன்வைத்துள்ளார். 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 8-8.5 விழுக்காடாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தனது உரையில், “ரூ.64,000 கோடி மதிப்பிலான பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் வழியாக எதிர்காலத்தில் வரும் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டை தயார்படுத்தப்படும். பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்குகிறது. ஏழைகள் பசியுடன் இல்லாத சூழலை எனது அரசு உறுதி செய்துள்ளது. இரண்டு கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. ஆறு கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

குடியரசுத் தலைவரின் உரை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பினோய் விஸ்வம், “குடியரசுத் தலைவரின் உரை வெற்று கூற்றுகளால் ஆனது. விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளின் உயிரிழப்பிற்கான இழப்பீடு, மின்சார சட்டத்தை ரத்து செய்தல் போன்றவற்றுக்காக விவசாயிகள் இன்னும் காத்திருக்கிறார்கள். விவசாயிகள் வியர்வை சிந்துவதாலேயே விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது. 30 விழுக்காடு இந்தியர்களுக்கு இன்னும் தடுப்பு மருந்து போடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“பொதுத்துறை மருந்துகளை யாருக்காக சும்மா வைத்திருக்கிறார்கள்? தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக கொரோனா பயன்படுத்தப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. குடியரசுத் தலைவரின் மௌனம். தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாடாளுமன்றம் தேவையற்றது. ‘வேகமாக வளரும்’ இந்தியா உலகளாவிய பட்டினி பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு பின்னால் இந்தியா உள்ளது. இந்த பட்ஜெட்டை கற்பனைக் கூட செய்ய முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்