Aran Sei

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா : பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை மீத ஒன்றிய அரசின் தாக்குதலென முத்தரசன் விமர்சனம்

மைதியைச் சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்கக் கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஜூலை 06), முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணி திரட்டி, போராடும் உரிமை என அடிப்படை உரிமைகள் மீது மத்திய பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய அரசின் அதிகார அத்துமீறலையும், அதன் மோசமான விளைவுகளையும் எதிர்த்துப் போராடுவோர் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில், புதிய சட்டங்களைத் தொடர்ந்து இயற்றி வரும் மத்திய அரசு, தற்போது திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021-ஐக் கொண்டுவந்துள்ளது என்றும் இதன் மூலம், திரைப்படங்களில் தாங்கள் விரும்பும் சார்பு கருத்துகள் மற்றும் காட்சிகளை மட்டுமே அனுமதிக்க வழிவகை செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘எங்களுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.30,352 கோடி’ – ஆண்டுக்கு ஆண்டு உயர்வதாக மகாராஷ்ட்ர நிதியமைச்சர் தகவல்

மேலும், “தணிக்கைத் துறையின் அனுமதி பெற்று புழக்கத்தில் உள்ள பழைய திரைப்படங்களையும் தடை செய்வது, அதன் பல்வேறு காட்சிகளை வெட்டிச் சீர்குலைப்பது என்ற தீய நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. மேல்முறையீட்டு உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, குரல் எழுப்பி வருபவர்களைக் குறிப்பாக நடிகர் சூர்யாவைக் குறிவைத்து பாஜக இளைஞரணியும், அதன் ஆதரவு அமைப்புகளும் கலகத்தைத் தூண்டும் மலிவான செயலில் ஈடுபட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

ஜனநாயக உரிமையைப் பறித்து, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் சீர்குலைவு செயல்களை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்