Aran Sei

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிகையை 2௦ மடங்கு குறைத்து காட்டும் பீகார் அரசு – குற்றஞ்சாட்டிய சி.பி.ஐ(எம்.எல்)

பீகார் மாநில அரசு கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிகையை  2௦ மடங்கு குறைத்துக் காட்டியுள்ளதாக சி.பி.ஐ-எம்.எல் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தின்  9 மாவட்டங்களில் உள்ள 1,693 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தொற்றினால்  6,420 பேர்  இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் , இது அரசின் கணக்குகளில் குறிப்பிடப்படவில்லை  என்றும்  அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பீகார் அரசின் புள்ளிவிவரப்படி தற்போது வரை  9,639 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

இந்நிலையில், ஒருவேளை சி.பி.ஐ-எம்.எல் கட்சியின் கணக்கினையும் சேர்த்தால் இறப்பு எண்ணிக்கை  16,000 எட்டும் எனவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.

அசாம் – மிசோராம் எல்லை கலவரம் – அசாம் முதலமைச்சர் மீது மிசோரம் காவல் துறை வழக்குப் பதிவு

இதுகுறித்து தெரிவித்துள்ள சி.பி.ஐ-எம்.எல் கட்சியின் பொது செயலாளர் குனால்,”கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக்  குறைந்தபட்சம் 2௦ மடங்கு குறைத்துக் காட்டியுள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழைத்திருக்கும் அநீதி.” என்று  கூறியுள்ளார்.

மேலும், “கொரோனா தொற்றால் இறந்தவர்களின் கணக்கை அரசு குறைத்துக் காட்டியது குறித்து பீகாரின் பிற மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். கொரோனா  இறப்புகள் குறித்த அனைத்து மாவட்டங்களின்   தகவல்கள் சேகரிக்கப்பட்ட பிறகு மொத்த எண்ணிகையை வெளியிடுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

அதுமட்டுமல்லாது, “கொரோனா இறப்பு குறித்து  முறையான ஆய்வுக்கு பின்னர் அரசு கணக்கில்  காட்டாத  இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2 லட்சத்திற்கு குறையாது” என்றும் சி.பி.ஐ-எம்.எல் கட்சியின் பொது செயலாளர் குனால் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்