Aran Sei

மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு இரங்கல்: ’எங்களது யுத்தம் காவலர்களுக்கு எதிரானது அல்ல’ – மாவோயிஸ்டுகள் அறிக்கை

”நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நீங்கள் வேலையின்மை காரணமாகக் காவல்துறையில் இணைந்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த ஆபத்தான அடிமை வேலையை விட்டுவிட்டு, சுயமரியாதையாக இயங்கி கொண்டிருக்கும் மக்கள் இயக்கங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்” என்று பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு மாவோயிஸ்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சத்திஸ்கரின் சுக்மா, பிஜாப்பூர் பகுதிகளில் உள்ள 5 முகாம்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகாமான வீரர்கள், மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி (சனிக்கிழமை), மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலில் பலியான 22 வீரர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டன.

மஹாராஷ்ட்ராவில் மாவோயிஸ்டுகள் 5 பேர் சுட்டுக்கொலை – ‘நக்சல் வாரம்’ கடைபிடிக்கப்பட இருந்த நிலையில் நடவடிக்கை

இந்த மோதலின்போது, கோப்ரா படையைச் சேர்ந்த வீரரான ராகேஷ்வர் சிங் மானசின் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் மாவோயிஸ்டுகளால் பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

கோப்ரா என்பது இந்தியாவில் உள்ள மாவோவிஸ்ட், நக்சலைட் அமைப்புகளுடன் மோதும் மத்திய ரிசர்வ் காவல்படையின் ஒருபிரிவாகும். இந்தியாவின் மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே பிரத்தியேக கொரில்லா தாக்குதல் கற்ற படையாகும். இத்தகைய சிறப்பு பயிற்சியின் மூலம் மாவோயிஸ்ட் குழுக்களை கோப்ரா ஓடுக்குகிறது. இந்திய துணை இராணுவத்திலேயே வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை கோப்ராதான்.

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி – மாவோயிஸ்டுகள் என குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை

ஒரு மோதலுக்குப் பின்னர், துப்பாக்கி முனையில் கோப்ரா வீரர் பிணைக் கைதியாகக் கொண்டு செல்வது முன்னெப்போதும் இல்லாதது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

’மாவோயிஸ்ட்’ வழக்கில் ஜாமீன். போராடுவது தேச துரோகமாகாது – கேரள நீதிமன்றம்

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய பிஜாப்பூரின் தலைமை காவல் அதிகாரி, கம்லோச்சன் காஷ்யப், ”ராகேஷ்வர் சிங் மானஸ் உயிருடன் இருக்கிறார், மாவோயிஸ்டுகளால் பிணையக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பீகார் : மூன்று மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டரில் கொலை

இதையடுத்து, உள்ளூரில் உள்ள இரண்டு செய்தியாளர்களிடம் மாவோயிஸ்டுகள் தொடர்பு கொண்டுள்ளனர். ஒரு செய்தியாளரிடத்தில், ”அவர் (ராகேஷ்வர் சிங் மானஸ்) நலமாக உள்ளார். மற்ற தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு

மற்றொரு செய்தியாளரிடத்தில் பேசிய மாவோயிஸ்டுகளின் செய்தி தொடர்பாளரான விகல்ப்,” பாதுகாப்பு படையினர் தரப்பில் எவ்வளவு பேர் மரணமடைந்துள்ளனர் என கேட்டதாகவும், காவலர் மன்ஹாஸ் தங்களுடைய கண்காணிப்பின் கீழ் உயிருடன் இருப்பதாகவும்” கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பூச்சிகொல்லி மருந்தை அதிகவிலைக்கு விற்றவரை கொலை செய்த மாவோயிஸ்டுகள்

மேலும், அவர் காயப்பட்டு இருந்ததாகவும் மாவோயிஸ்டுகளின் பராமரிப்பில் தற்போது நலமாக இருப்பதாகவும் விகல்ப் கூறியுள்ளார். அவரைத் தாக்குவதற்கான எந்த முனைப்பும் இல்லை எனவும் மூன்று நாட்களுக்குள் அவர் விடுவிக்கப்படுவார் எனவும் விகல்ப் தெரிவித்துள்ளனர்.

83 வயதான பழங்குடியினர் உரிமைப் போராளி ஸ்டேன் ஸ்வாமி – என்ஐஏவால் கைது

இந்நிலையில், சத்திஸ்கரில் இருக்கும் இந்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவம், ஆகியோரை குறிப்பிட்டு மாவோயிஸ்டுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ”நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நீங்கள் வேலையின்மை காரணமாகக் காவல்துறையில் இணைந்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த ஆபத்தான அடிமை வேலையை விட்டுவிட்டு, சுயமரியாதையாக இயங்கி கொண்டிருக்கும் மக்கள் இயக்கங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தி கூறுகிறது.

ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

மேலும், சுரண்டலின் ஒரு பகுதியாக இருந்து ஏழை மக்களை மன அழுத்தத்திற்கு தள்ளாதீர்கள் எனவும் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கேரளா காடுகளில் மீண்டும் ஒரு ” மோதல் ” – மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

இந்த ஆண்டு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 3 2021 வரை 28 மாவோயிஸ்டுகள் மரணமடைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தால் பாதுகாப்பு படையில் பணியாற்றி, மரணமடைந்துள்ள வீரர்களுக்குத் தங்களது வருத்தத்தை மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர்களை அறிக்கையில், ’தோழர்கள்’ என்று குறிப்பிட்டுள்ள மாவோயிஸ்டுகள், “நாங்கள் கம்யூனிஸ்டுகள், ஒரு உயிரிழப்பு எங்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும். எங்களது சண்டை பாதுகாப்பு படையினருக்கு எதிரானது அல்ல. நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்போது எதிர்வினை செய்கிறோம்” என்றும் மாவோயிஸ்டுகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்