எழுவர் விடுதலையை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் என்று ஆளுநர் கூறியிருப்பது மக்கள் உணர்வை அவமதிப்பது, சட்ட நெறிமுறைகளை அத்துமீறுவது, மனிதாபிமானமற்ற அரக்கத்தனமானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநரே முடிவெப்பார். அவரது முடிவை இரண்டொரு நாளில் அறிவிப்பார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆளுநர் உள்துறை அமைச்சகத்தின் பன்னாட்டு விசாரணையைக் காரணம் காட்டி, எழுவர் விடுதலையை தாமதப்படுத்தி வந்த நிலையில், பன்னாட்டு விசாரணைக்கும், எழுவர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது.” என்று அவர் நிகழ்வுகளை நினைவூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஆளுநர் எழுவர் விடுதலைக்கான உத்தரவு வெளியிட அனுமதியளித்திருக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், “சட்ட வல்லுனர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விசாரித்த தலைமை காவல் அதிகாரிகள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த குரலில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி வரும் நிலையில், எழுவர் விடுதலையை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் என்று ஆளுநர் கூறியிருப்பது மக்கள் உணர்வை அவமதிப்பது, சட்ட நெறிமுறைகளை அத்துமீறுவது, மனிதாபிமானமற்ற அரக்கத்தனமானது.” என்று அவர் கண்டித்துள்ளார்.
’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்
ஆளுநரின் இந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் எழுவர் விடுதலையை இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து உடனடியாக நிறைவுற்ற வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.