Aran Sei

பாஜகவை எதிர்க்கவே குறைந்த இடங்களுக்கு கூட்டணி ஒப்புதல் – டி.ராஜா

மிழகத்தில் அரசியல் நிர்பந்தங்கள் காரணமாகவே சட்டப்பேரவை தேர்தலில் இடது சாரி கட்சிகளுக்குக் குறைவான  எண்ணிக்கையிலான இடங்கள் கிடைத்துள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், டி.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜகவை தோளில் சுமக்கும் அதிமுக அரசை அகற்ற வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தமே திமுக கூட்டணியில் 6 இடங்களுக்கு இடது சாரி கட்சிகள் உடன்பட வைத்துள்ளது. இந்த இடங்கள் இடது சாரிகளின் அரசியல் மற்றும் சித்தாந்த செல்வாக்கிற்கு உகந்ததாக இல்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இடது சாரிகள் கூட்டணியில், ஷரிஃப் அப்பாஸ் சித்திக்கின் ஐ.எஸ்.எஃப் கட்சிக்கு 37 இடங்களில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

முகக்கவசம் அணியவில்லையென்றால் பயணிக்க முடியாது – விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டி.ராஜா, “சித்திக் அல்லது ஐ.எஸ்.எஃப் கட்சி மதக்கலவரத்தை தூண்டிவிட்டதற்கான ஆதாரம் இல்லை. கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் பின்தொடர்வதால், வகுப்புவாதமாகாது. அப்படி  என்றால் மதவாத பாசிச அரசியல் வளர்க்கும் பாஜகவை என்ன சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல்குறித்து பேசிய அவர், மம்தா காயமடைந்திருப்பது தெளிவாக தெரிந்தாலும், இது எப்படி நடந்து என்பதை மேற்கு வங்க அதிகாரிகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். அரசியலில் வன்முறைக்கு இடமில்லை என டி.ராஜா கூறியுள்ளார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்