Aran Sei

வீட்டிற்கு முன் சாணத்தைக் கொட்டிய விவசாயிகள் : போராடியவர்களை கைது செய்ய சொல்லி பாஜக தலைவர் தர்ணா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 36 நாட்களாகப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான், கேரளா பேன்ற மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தன்னிச்சையாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப்பின் ஹொஷியார்பூர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியப்படி முன்னாள் இணை அமைச்சரும் பாஜக தலைவருமான திக்‌ஷன் சுட் வீட்டிற்கு வெளியே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

” போராட்டத்துக்கு ஆதரவாக உயிர் தியாகம் ” – பஞ்சாப் வழக்கறிஞர் தற்கொலை

 

இதையடுத்து டிராக்டரில் கொண்டு வரப்பட்ட மாட்டு சாணத்தை திக்‌ஷன் சூட் வீட்டு வாசலில் போராட்டக்காரர்கள் கொட்டியுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போராட்டக்காரர்களுக்கும் பாஜக தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

 

வீட்டிற்கு முன் மாட்டு சாணத்தை கொட்டியதால் ஆத்திரமடைந்த பாஜக தலைவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி தர்ணா செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு  பஞ்சாப்பின் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார், மேலும் ”மக்களின் அந்தரங்கத்தில் (Privacy)  தலையிடுவது விவசாயிகளின் அமைதியான போராட்டக்காரர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி போராட்டத்தின் நோக்கத்தை கெடுத்துவிடும்” என்று  கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் “பல மாதங்களாக பஞ்சாபிலும், நாட்டின் தலைநகர் எல்லைகளிலும் எந்தவொரு வன்முறை அல்லது சட்டவிரோத செயலிலும் ஈடுபடாத முன்மாதிரியான கட்டுப்பாட்டைக் காட்டி வருகிறீர்கள். போராட்டங்களை அமைதியான வழியில் நடத்துமாறு விவசாய தலைவர்களால் திட்டவட்டமாகக் கேட்கப்பட்ட போதிலும் சில போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டை இழந்து வருகின்றனர்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர முடிவு – பஞ்சாப் முன்னாள் முதல்வர்

 

மேலும், “எந்தவொரு அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது, அவர்களது வீடுகளின் வெளியே  மறியல் செய்வது அமைதியாக நடந்துக் கொண்டிருக்கும் போராட்டத்தை மாற்றி பல்வேறு சாதிகள், மதங்கள், சமூகங்கள் போன்ற மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை அழிக்கக்கூடும்” என முதலமைச்சர் அமரிந்தர் சிங் எச்சரித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி – முடிவை வரவேற்ற பஞ்சாப் முதல்வர்

 

இந்த சம்பவத்தை பஞ்சாப் பாஜக தலைவர் அஸ்வானி குமார் சர்மா கண்டித்துள்ளார். இதைச் செய்தவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்