Aran Sei

மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமாக, மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் மருந்தாக எடுத்துக் கொள்வது, மற்ற நோய்கள் வருவதற்கு தான் வழிவகுக்கும் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,29,942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.29 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,876 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ்வி சூர்யாவை கேள்விகளால் திணறடித்த பத்திரிகையாளர்கள் – பாதியில் நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தச் சூழலில் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் சிலர், உடலில் கொரோனா நோய் எதிர்ப்புசக்தியை பெறுவதற்கும், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வரவும், வாரம் ஒருமுறை கோசாலைகளுக்குச் (பசு பாதுகாப்பு மையம்) சென்று, தங்கள் உடல் முழுவதிலும் மாட்டுச் சாணத்தாலும் மாட்டு மூத்திரத்தினாலும் ஆன கலவையால் பூசிக் கொள்ளுவதாக இந்தியா டுடே கூறுகிறது.

”இந்த கலவை உடம்பில் காய்ந்து போகும் வரை, கோசாலைகளில் இருக்கும் பசுக்களை கட்டிப்பித்து கொள்வது, பசுக்களுக்கு பல்வேறு மரியாதைகளை செய்வது, யோகாசனம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் உடம்பில் இருக்கும் கலவை காய்ந்த பின்னர், பால் அல்லது மோரினால் அதை கழுவிக்கொள்கின்றனர்”  என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘கொரோனாவிலிருந்து குணமடைய மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வேண்டும்’: குடித்துக் காட்டிய பாஜக எம்எல்ஏ

இது தொடர்பாக மருந்தகத்தில் பணிபுரியும் கவுதம் மனிலால் போரிசா எனும் நபர் இந்தியா டுடே பத்திரிகையிடம் பேசுகையில்  ”இங்கு மருத்துவர்கள் கூட வருகின்றனர். இந்த சிகிச்சை தங்களுடைய எதிர்ப்புசக்தியை வலுப்படுத்துவதாக அவர்கள் நம்புகின்றனர். இதன் வழியே அவர்கள் கொரோனா நோயாளியை மிக எளிதாக கையாள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சையின் வழியே தான், அவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

பசுவை கொல்பவரை மனிதரை கொன்றவராக கருத வேண்டும் – மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி

இதுதொடர்பாக, இந்திய மருத்துவ கழகத்தின் தேசிய தலைவர், டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் பேசுகையில், ”கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான எதிர்ப்புசக்தியை மாட்டு சாணமும் மாட்டு மூத்திரமும் வழங்குகிறது என்பதற்கு, விஞ்ஞானப்பூர்வமான நிருபணம் ஏதுமில்லை. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் நம்பிக்கைச் சார்ந்ததே” என்று இந்தியா டுடே-விடம் கூறியுள்ளார்.

சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு

மேலும் ”இது போன்ற நடவடிக்கைகள் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படத்தலாம். மிருகங்களிடமிருந்து மனிதனுக்கு புதுவகையான நோய்கள் பரவும் ஆபத்து இருக்கிறது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்