Aran Sei

’கோவிஷீல்டு மருந்து செலுத்தியவர்களை ஏற்கமுடியாது’ – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு இனவெறியைக் காட்டுவதாக காங்கிரஸ் கண்டனம்

ந்தியா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின்  கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்கள்  செலுத்தி இருந்தாலும் தடுப்புமருந்து செலுத்தப்பட்டதாக கருதப்படாது என்று  ஐக்கிய இராஜ்ஜிய அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு பயணம் மேற்கொள்ளவது குறித்து அந்நாட்டு அரசு  வெளியிட்டுள்ள  பயண வழிகாட்டுதலில், ஆப்ரிக்கா, தென்அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பு மருந்து செலுத்தியிருந்தாலும் அவர்கள்  தடுப்புமருந்து செலுத்தியதாக கருதப்படாது என்று தெரிவித்திருந்தனர்.

மேலும், தடுப்பு மருந்து செலுத்தாதவர்களுக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்த உத்தரவானது, “இனவெறி” மற்றும் “முற்றிலும் வினோதமானது” போக்கு என காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இதுமுற்றிலும் வினோதமானது, கோவிட்ஷீல்ட் தடுப்பு மருந்து ஐக்கிய இராஜ்ஜியத்தில் மேம்படுத்தப்பட்டது. மேலும், புனேவில் உள்ள சீரம் நிறுவனம் அந்த நாட்டிற்கும் கூட வழங்கி வருகிறது. இது இனவெறி நடவடிக்கை” என்றும் பதிவிட்டுள்ளார். 

இதேவேளையில்,  ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து பயன்பாட்டில் உள்ள ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இஸ்ரேல், சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து கோவிட்ஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்