Aran Sei

தடுப்பூசியை தனியாருக்கு விற்க அனுமதியளித்த மத்திய அரசு – இருமடங்காக விலை உயர்த்திய மருந்து நிறுவனம்

கொரோனா தடுப்பூசியான “கோவிஷீல்டு” தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அத்தடுப்பூசிக்கான விலை பட்டியலை அறிவித்துள்ளது.

இதன்படி, மாநில அரசுகளுக்கு 400 ரூபாயும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது நாள்வரை, தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் மக்களுக்கு ரூ.250 விலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது.

ஆனாலும், மத்திய அரசுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் 150 ரூபாய் விலையிலேயே “கோவிஷீல்டு” தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 50% தடுப்பூசிகள் மத்திய அரசுக்கும், 50% மாநில அரசுக்கும், தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கோவிஷீல்டு” தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு 3000 கோடி ருபாய் முன்கூட்டியே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்