Aran Sei

அரசு ஆசிரியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

credits : the indian express

ரசுப் பள்ளி ஆசிரியர்களில் 45 வயதை கடந்த அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகவாக பரவி வருவதை தடுக்கும் ஒரு பகுதியாக பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணையவழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு பணிகளிலும் தன்னார்வலர்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

’10 ஆம் வகுப்பில் எல்லோரும் தேர்ச்சி; கூடுதல் மதிப்பெண் பெற தேர்வெழுதுங்கள்’ – பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு

இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ”அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 45 வயதை கடந்த ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்த விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட ஆட்சியர், சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து கல்வி அதிகாரிகள் பணிபுரிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்