Aran Sei

கோவிட்ஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பு – மத்திய அரசு தகவல்

கோவிட் ஷீல்ட் தடுப்பூசியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக முதல் ஊசி மற்றும் இரண்டாம் ஊசிக்குமான கால இடைவெளியை 4 வாரங்களில் இருந்து 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியஅரசு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”கோவிட்ஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸுகளுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதால், மருந்தின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தரவுகள்மூலம் தெரியவந்திருப்பதால், இடைவெளியை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக் கூடாது- தேசிய ரத்த பரிமாற்ற குழு அறிவிப்பு

மேலும், இந்த இடைவெளி அதிகரிப்பு கோவிட்ஷீல்ட் தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கோவாக்சினுக்கு பொருந்தாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட மேலாளர்கள், தடுப்பூசிகள் பெறுநர்களுக்கு திருத்திய மருந்தளவு இடைவெளிகுறித்த செய்தியை பரவலாக பரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், திருத்தப்பட்ட தடுப்பூசி இடைவெளியைப் பின்பற்றபடுவதை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் செயலர் உறுதி செய்யவும்  அதில் அறிவுறுத்திப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்