Aran Sei

மாநில அரசுகளுக்கான கோவீட்ஷீல்ட் தடுப்பூசி விலையில் 100 ரூபாய் குறைத்த சீரம் – எழுந்த கண்டனங்கள்தான் காரணமா?

மாநில அரசுகளுக்கு விற்கப்பட்டும் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ 400யில் இருந்து ரூ 300 ஆக குறைப்படுவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மே ஆம் 1 ஆம் தேதி முதல், 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், இதற்கான முன்பதிவு நேற்று (ஏப்ரல் 28) மாலை 4 மணி முதல் தொடங்கியது.

இதற்காக தடுப்பூசி நிறுவனங்கள்,  தயாரிப்புகளில் 50 விழுக்காட்டை மத்திய அரசுக்கும் மீதமிருக்கும் 50 விழுக்காட்டை நேரடியாக மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான விலைகளை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

இதனைத் தொடர்ந்து கோவிட்ஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸிற்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ. 400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600 ஆகவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்ணயத்தது.

இதே போன்று கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை மாநில அரசுகளுக்கு ரூ. 600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.

கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ.2000 – ’சீரம் இந்தியா’ நிறுவனம் அறிவிப்பு

அதே சமயம் மத்திய அரசிற்கு விற்கப்படும் 50 விழுக்காடு மருந்துகளுக்கு இரண்டு நிறுவனங்களும் ஒரே விலையாக ரூ 150 என நிர்ணயித்துள்ளது.

ஒரே மருத்துக்கு மூன்று விதமான விலை எப்படி இருக்க முடியும். இது மாநில அரசுகளுக்குக் கூடுதல் சுமை அளிக்கும் என கடும் கண்டங்கள் எழுந்தன.

உலகிலேயே அதிக விலையில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் இந்தியா – முதலாளிகளின் நலன் காக்கிறதா மத்திய அரசு?

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு விற்கப்படும் தடுப்பூசி விலையில், ரூ 100 குறைக்கப்படுவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”சீரம் இன்ஸ்டிடியூர் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மக்களை நேசிக்கும் தன்மையை வெளிப்பட்டுத்தும் விதமாக, மாநில அரசுகளுக்கு விற்கப்படும் தடுப்பூசி விலை 400 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக குறைக்கப்படுகிறது. இந்த விலைக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விலைக்குறைப்பின் மூலம் மாநில அரசுகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சப்படும். அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, எண்ணற்ற உயிர்கள் பாதுகாக்கப்படும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்