ஆல்கஹால் எடுத்துக்கொண்டால், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா என்பது குறித்து இதுவரை இந்தியாவில் எவ்வித ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், ருஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அமைச்சகத்தின் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடவும் அமைச்சகத்தால், கோவிட் இந்தியா சேவா என்ற பெயரில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வாமை உள்ளவர்கள் கோவிஷீல்ட் மருந்தை எடுக்கக்கூடாது: சீரம் இந்தியா நிறுவனம்
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 19), முகேஷ் குமார் என்ற ட்விட்டர் பயனர், ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் செயற்பாட்டு திறன் பாதிக்குமா என்று கோவிட் இந்தியா சேவாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
As such no specific study focused on the impact of alcohol consumption on #COVID19Vaccine’s effectiveness has been conducted in India.
However, alcohol use, especially heavy use, weakens the immune system & thus reduces the ability to cope with infectious diseases. https://t.co/DnxzNhl9sc— Covid India Seva (@CovidIndiaSeva) April 20, 2021
அதற்கு கோவிட் இந்தியா சேவா அளித்துள்ள பதிலில், “ஆல்கஹால் உட்கொள்வதால், கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் பாதிக்கப்படுமா என்பது குறித்து பிரதியேகமாக ஆராய்ச்சிகள் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், ஆல்கஹால் உட்கொள்ளுதல், முக்கியமாக அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுவதால் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும். அதனால், தொற்று நோயை எதிர்கொள்ளும் திறன் பாதிப்புறும்.” என்று தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.