மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காததால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்தால் அது இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவொன்றின் மீதான விசாரணையின்போது நீதிபதி சித்தார்த் வர்மா, நீதிபதி அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, “மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்காததால் கொரோனா பாதிப்படைந்தவர்கள் மரணமடைந்தால் அது ஒரு கிரிமினல் குற்றம், இச்செயல் இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல” என்று அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு கூறுவது குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற அமர்வு, “ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகளை பார்க்கும் போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு கூறுவதற்கும் இடையே முரணான தோற்றம் உருவாகுகிறது’ என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் புதிய மசூதி இட வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
மேலும், உத்தரபிரதேசத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு எண்ணும் பகுதிகள் மற்றும் மையங்களின் சி.சி.டி.வி காட்சிகளை நிர்ணயிக்கப்பட்ட அடுத்த விசாரணை தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.