Aran Sei

தஞ்சாவூரில் ‘கோவாக்சின்’ தடுப்பூசி பற்றாக்குறையா? – இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்

ஞ்சாவூரில் ‘கோவாக்சின்’ தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தற்போது 1100 பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா அவசர பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி – நிபுணர் குழு பரிந்துரை

தஞ்சாவூரில் கோவாக்சின்’ தடுப்பூசியின் முதல் தடவை தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள மருத்துவமனை வந்தபோது தடுப்பூசி இல்லாததால் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாமல் மக்கள் வீடு திரும்பியுள்ளார்.

இன்று காலை 20 கோவாக்சின் தடுப்பூசிகளே இருப்பு இருந்த நிலையில் 20 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

கொரனோ தடுப்பூசி போட்டுகொள்வதற்கான வயதுவரம்பு தளர்வு – மத்திய அரசு அறிவிப்பு

இன்று கொரோனா தடுப்பூசிகுறித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பூசிபற்றாக்குறை நிலவவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

SOURCE; PUTHIYATHALAIMURAI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்