Aran Sei

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் இதனை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாக சிவ சேனா கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தப்பட்ட 40 பெண் கைதிகள்

இதுகுறித்து பத்திரிகையளர்களிடம் பேசிய அவர், கொரோனா கட்டுப்படுத்துதலில் மகாராஷ்டிரா மாநிலம் செயல்படுத்திய திட்டங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டுமெனவும் கூறியுள்ளார்.

மேலும், ”கொரோனா தடுப்பு பணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு செய்துவரும் முயற்சிகளை எல்லோரும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே போன்று நாடெங்கும் இதையொரு முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும்” என்று சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார்.

 மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

கொரோனாவை தேசிய பேரிடராக அறிவிப்பது குறித்து கூறிய சஞ்சய், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட கூட்டத்தின் போதும், கடிதம் வாயிலாகவும் கொரோனா தொற்றை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, கடந்த ஏப்ரல் 27 அன்று, உச்சநீதிமன்றம் கொரோனா இரண்டாம் அலையைத் தேசத்தின் சிக்கல் என்று குறிப்பிட்டதாகவும், உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருப்பது நாட்டுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுட் கூறியுள்ளார்.

source; the hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்