Aran Sei

‘கொரோனா தடுப்பூசி என்று தெரியாமல் திருடி விட்டோம்’ – வருத்தம் தெரிவித்து திருடியவற்றை திரும்ப கொடுத்த திருடர்கள்

ரியானா மாநில ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்ட 1,700 டோஸ் கொரோனா தடுப்பூசி சில மணி நேரங்களுக்குப் பிறகு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது கொரோனா தடுப்பூசி என்று தெரியாமல் திருடிவிட்டோம் என்ற குறிப்பையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

நேற்று (ஏப்ரல் 22), இதுதொடர்பாக பேசிய ஜிந்த் மாவட்ட காவல்துறை அதிகாரி ராஜேந்தர் சிங், “மருத்துவமனையில் இருந்து மொத்தம் 1,270 டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 440 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன. திருடியவர்கள் வேறு தடுப்பூசி, மருந்து, பணம் போன்றவற்றில் கை வைக்கவில்லை. நேற்று இரவு, ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு தேநீர் கடையில், காவலர்களுக்கு உணவு பொட்டலங்கள் என்று கூறி கடைக்காரரிடம் தடுப்பூசிகளை கொடுத்து சென்றுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

லாபமற்ற விலையில் தடுப்பூசி மருந்தை வழங்கத் தயார் – ஃபைசர் நிறுவனம் தகவல்

மேலும், “தடுப்பூசிகளைத் திருடியதற்கு தனது வருத்தத்தை தெரிவிக்கும் குறிப்பை திருடன் எழுதியிருக்கிறான். வேறு ஏதேனும் தடுப்பூசி அல்லது போதைப்பொருளைத் திருட வந்திருக்கிறார்கள். தாங்கள் திருடியது அது இல்லை என்று தெரிந்த பிறகு அவர்கள் அதை திருப்பித் தந்திருக்கலாம். விரைவில் அவர்களை கைது செய்வோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்