Aran Sei

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு

Vacinnation

டுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. மேலும் அதற்கான முன்பதிவு ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்தது.

அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர், www.cowin.gov.in என்ற இணையத்திலோ அல்லது ஆரோக்கிய சேது செயலிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஆசிரியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மத்திய அரசே இலவசமாக வழங்கும் என்றும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்காக, தடுப்பூசி நிறுவனங்கள் உற்பத்தியில் 50 விழுக்காடு வரை மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கே நேரடியாக விற்பனை செய்துகொள்ளவும் அரசு அனுமதிளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்