மத்திய அரசு பாரப்பட்சமான தடுப்பூசி கொள்கையைக் கடைபிடிப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை; கட்டுப்பாடின்றி இடைத்தரகர்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. மத்திய அரசுத் தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் எந்த உத்திரவாதமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
• No free vaccines for 18-45 yr olds.
• Middlemen brought in without price controls.
• No vaccine guarantee for weaker sections.
GOI’s Vaccine Discrimination- Not Distribution- Strategy!
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மூன்றாவது கட்டமாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. இதன் தொடர்சியாக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசி உற்பத்தியில் 50 விழுக்காட்டை நேரடியாக மாநில அரசிற்கும், வெளி சந்தகைளிலும் விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு விலையை முன்னரே நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.