Aran Sei

கொரோனா உயிரிழப்பு குறித்து மறு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்: மறுஆய்வில் இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது அம்பலம்

பீகாரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஜூன் 7 ஆம் தேதி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்புகள் 5,424 என்று கணக்கிடப்பட்ட நிலையில், பாட்னா உயர்நீதிமன்றம் உயிரிழப்புகளை ஒழுங்காக சரிபார்க்குமாறு உத்தரவிட்டதன் பேரில் மறுகணக்கெடுப்பு எடுத்தபோது 9,375 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

பக்சர் மாவட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக முரண்பாடான தகவல்களை கொண்ட இரண்டு பிரமான பத்திரங்களை இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர். இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் அமர்வு, அனைத்து உத்தரவுகளையும் சரி பார்க்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தந்தது.

”அனைத்து ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்து உண்மைகளையும் சரிபார்த்து,  பின்னர் எங்கள் முன் வைக்க வேண்டும். இல்லையெனில், அது தவறான அல்லது முழுமையற்ற பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கு சமமாகும்” என பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி எஸ். குமார் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது.

மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்த அரசியல் நகர்வு – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

நீதிமன்ற வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விவரங்களை சரிபார்க்குமாறு மாவட்ட நீதிபதிகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர்கள் ஆகியோருக்கு மாநில சுகாதாரத்துறை விரிவான அறிக்கையை அனுப்பியிருந்தது.

அதன்படி கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், பீகாரில் 9,375 உயிரிழப்புகள் நடைபெற்றிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்