நாட்டில் கிட்டதட்ட 10 ஆயிரம் குழந்தைகளுக்கு உடனடியாக கவனிப்பும் பாதுகாப்பும் தேவை என உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க தொடங்கிய மார்ச் 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் பெற்றோரை இழந்த அல்லது கைவிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகளுக்குக் குழந்தை கடத்தல் மற்றும் உடல் உறுப்பு திருட்டு கூட்டத்தால் ஆபத்திருப்பதாக கூறிய என்சிபிசிஆர், குழந்தைகளின் விவரங்களைத் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் சட்டவிரோதமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
”கொரோனா பெருந்தொற்று சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைப் பேரழிவிற்கு உட்படுத்தியது. குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர் அல்லது பெற்றோர் இருவரின் மறைவால் அனாதையாக மாறிய பல குழந்தைகள் உள்ளனர்.”என உச்சநீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் கௌரவ் அகர்வால் கூறினார்.
பாராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் பட்டியலை என்சிபிசிஆரின் இணையதளமான ‘பால ஸ்வராஜ்’யில் பதிவு செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதை அடிப்படையில், 9,346 குழந்தைகளின் விவரம் அந்த இனையதளத்தில் பதியப்பட்டுள்ளது.
இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 2,110 குழந்தைகளும், பிகாரில் 1,327 குழந்தைகளும், கேரளாவில் 952, மகாராஷ்டிராவில் 796, தமிழ்நாட்டில் 159 குழுந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவை என பதியப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.