Aran Sei

வீடற்றவர்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும் – பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனாத் தொற்றிலிருந்து வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு மருந்து செலுத்த  எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டுமென டெல்லி மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வீடற்றவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இதை “மனிதப் பிரச்சனை” என்று  நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும்    அந்த செய்தி கூறுகிறது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பெரும்பாலான வீடற்றவர்களுக்கு கொரோனா நடவடிக்கைகள்குறித்த விழிப்புணர்வு இல்லை. ஒருவேளை அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. பெரும்பாலானவர்கள் முறையான மருத்துவ உதவி அல்லது சிகிச்சை பெற இயலாதவர்களாக உள்ளனர். எனவே, மூன்றாம் அலை ஏற்படுவதற்குள்ளாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தோருக்கு தனியான பொதுக்கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

நீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு வாரங்கள் கழித்து விசாரிப்பதாக கூறியுள்ளதாகவும்  அந்த செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்