Aran Sei

‘தடுப்பூசி போட விதிகளை மீறும் தனியார் மருத்துமனைகள்’: நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்

கொரோனா தடுப்பு மருந்தை ஹோட்டல்களுடன் இணைந்து வழங்கும் தனியார் மருத்துவமனைகள்மீது நிர்வாக ரீதியாகவோ அல்லது துறை ரீதியாகவோ நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் சில ஹோட்டல்களுடன் இணைந்து தடுப்பூசி போடுவதற்கான முகாம்களை நடத்துவதாகக் கூறிய சுகாதார அமைச்சகம், இது பரிந்துரைக்கபட்ட வழிகாட்டுதல்களை மீறுவதாகும் என தெரிவித்துள்ளது.

‘தடுப்பூசி போட விதிகளை மீறும் தனியார் மருத்துமனைகள்’: நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்

ஒன்றிய அரசு தனது கடிதத்தில், ”சில தனியார் மருத்துவமனைகள் சில ஹோட்டகளுடன் இணைந்து தடுப்பூசியை வழங்குகிறது என்று எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது” என குறிப்பிட்டுள்ளது.

”அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள், பணியிடங்கள், கொரோனா தடுப்பூசி மையத்திற்கு அருகில் முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வசிக்கும் வீடுகள், வீட்டுவசதி சங்கங்கள் ஏற்பாடு செய்யும் முகாம்கள் தவிர வேறு எங்கும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட கூடாது. எனவே நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி முகாம்கள் கொரோனா தடுப்பூசி வழிகாட்டுதல்களுக்கு முரணானது, அவை நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவிக்கபட்டுள்ளது.

கொரோனா பேரிடரில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது அவசியமா? – தொடுக்கப்ப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

”இது போன்ற தடுப்பூசி முகாம்களை நடத்தும், தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக தேவையான சட்டம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். எனவே, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தேசிய கொரோனா தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்படுவதை கண்காணித்து உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்