Aran Sei

 மருத்துவ வசதிகள் இல்லை என தெரிவித்த கிராம மக்கள் – அவதூறு பரப்புவதாக வழக்கு பதிந்த உத்திரபிரதேச காவல்துறை

த்திரபிரதேசம் மாநிலத்தில், மருத்துவ வசதிகள் இல்லாததால், மரத்தடியில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனக்கூறிய கிராம மக்கள்மீது, ஊடகங்களுக்கு ‘தவறான தகவல்’ வழங்குவதாக கூறி அம்மாநில காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு பதிவு செய்துள்ளதாக தி வயர் செய்தி வெளியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, ”கொரோனா பெருந்தொற்று சமயத்தில், உத்திரபிரதேச அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்து நோக்கத்துடன் தவறான தகவல்களைக் கூறி கிராம மக்களைத் தவறாக வழிநடத்தியதாக, மேவ்லா கோபால்கர்க் கிராமத்தைச் சேர்ந்த ஹர்வீர் தலான் மற்றும் அக்கிராமத்தின் முன்னாள் தலைவர் யோகேஷ் தலான் மீது கௌதம் புத் நகர நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.”

பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நோய் பாதிப்ப்பு இருந்ததாக கூறிய முன்னாள் தலைவர் யோகேஷ் தலான், “காய்ச்சல் அல்லது சளியால் பாதிக்கப்படாதவர்கள் இல்லாத வீடுகளே இந்தக் கிராமத்தில் இல்லை. நோயுற்றவர்களுக்கு பரிசோதனை செய்வது, அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது என இரு விசயங்களிலும் மாவட்ட நிர்வாகம் தோல்வியுற்றது. கிராம மக்கள் ஆதரவற்றவர்களாக உணருகின்றனர்.” என தெரிவித்தாக தி வயர் கூறியுள்ளது.

இந்தியாவிற்கு 60 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் – அமெரிக்க அதிபரிடம் மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்

மேலும், “முக்கிய அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் இருக்கும் நோயாளிகளைக் கூட மறுத்துவமனைகள் அனுமதிக்க மறுக்கின்றன” என கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஹர்வீர் தலானும், மற்றவர்களைப் போலவே பகல் நேரத்தில், வேப்ப மரத்தில் கிளைகளில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு, நிழலில் அமர்ந்துள்ளார். மரத்தின் குணப்படுத்தும் பண்புகள் தங்களை கொரோனா அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும் என அவர்கள் நம்புகின்றனர். ஒரு திறந்த வெளியில், வேப்ப மரத்தின் நிழலில் பல நோய்வாய்ப்பட்ட கிராமத்தினர் படுத்திருக்கின்றனர்.” என தி வயர் தெரிவித்துள்ளது.

மருத்துவ வசதிகள் இல்லை என கிராம மக்கள் கூறுவதை மறுத்துள்ள நிர்வாகத்தினர், ”ஹர்வீர் தலான் வேண்டுமேன்ற ‘போலி மருத்துவர்கள்’ பேச்சைக் கேட்டு இவ்வாறு செய்வதாகவும், சிகிச்சை மையத்தில் சேர மறுத்து வருவதாகவும்” அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும் –  சீரம் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அதார் பூனாவாலா தகவல்

மே 13 ஆம் தேதி முதல் இரண்டு பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறுயதை மறுத்துள்ள கிராம மகக்ள், தங்கள் கிராமத்தில் ஒருவருக்கு கூட பரிசோதனை நடைபெறவில்லை என தெரிவித்துள்ளதாக, தி வயர் கூறியுள்ளது.

இந்நிலையில், ”மே 17 ஆம் தேதி, கிராம மக்கள்மீது, ஜெவார் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளர் புகார் அளித்துள்ளார். அதன்படி, யோகேஷ் தலான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 188 (ஒரு பொது ஊழியரின் உத்தரவின் கீழ்ப்படியாமை), 269 மற்றும் 270 (தொற்று நோயைப் பரப்பும் செயல்) மற்றும் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருக்கிறது என காவல்துறையினர் தெரிவித்திருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்