Aran Sei

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 143% அதிகரிப்பு – ஸ்டடீஸ்டா நிறுவனம் அறிக்கை

லகளவில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த 14 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 143% அதிகரித்திருப்பதாக, ஸ்டடீஸ்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மியான்மரின் ராணுவத்தால் குழந்தைகள் உட்பட 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ – ஸ்டடீஸ்டா அறிக்கை

இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 212,000 ஆக உயர்ந்துள்ளதாக, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த ஏப்ரல் 20 முதல் மே 4 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்திலும், ஜப்பான் 25% இறப்பு விகிதம் அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உலகளவில் ஆண்டுக்கு 23 மில்லியன் கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன- பன்னாட்டு ஆய்வாளர்கள் அறிக்கையில் தகவல்

இதேபோன்று ,ஈரான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், லத்தீன் அமெரிக்க நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டடீஸ்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்