Aran Sei

தடுப்பூசிகளின் குறைவான எதிர்ப்பு சக்தி : இந்திய கொரோனா வகை பற்றிய முதற்கட்ட ஆய்வு முடிவு

credits : The Hindu

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கு (பி.1.617) எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிக குறைந்த அளவிலான எதிர்ப்புசக்தியையே (Antibodies) உருவாக்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,26,098 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,43,72,907 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,66,207 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3890 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 2,04,32,898 பேர் நோயிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் ஒரு பகுதியாக செயல்படும் தேசிய வைரலாஜி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் பல்வேறு மாதிரிகளை (இந்தியாவில் தற்போது பரவி வரும் பி.1.617, இங்கிலாந்தில் பரவி வந்த பி.1.1.7, தென் ஆப்பிரிக்காவில் பரவி வந்த  பி.1.351, பிரேசிலில் பரவிய கொரோனா தொற்றான பி2) சேகரித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மோடியை விமர்சிக்கும் சுவரோட்டிகள் – 9 பேரை கைது செய்த டெல்லி காவல்துறை

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கடுமையாக பரவி வந்த கொரோனா தொற்று வகை பி.1.-ஐ அடிப்படையாக வைத்து, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வருத்தம்

கொரோனா தொற்று தொடர்ச்சியாக உருமாறி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், உருமாறி வரும் கொரோனா தொற்றின் பாதிப்பை தடுப்பூசிகள் கட்டுப்படுத்துகிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா : கொரோனாவிலிருந்து தப்பி ’கருப்பு பூஞ்சை தொற்று’க்கு பலியிலான 52 பேர்

இதில், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு முறை செலுத்திக் கொண்ட பிறகும்,  கொரோனா தொற்றின் வகை பி.1. எதிராக தடுப்பூசிகள் உருவாக்கிய எதிர்ப்புசக்தியை விட 55 சதவீதம் குறைவாகவே கொரோனா பி.1.617க்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்குவதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

கங்கையில் மிதந்த சடலங்கள் – விசாரணை குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மேலும், கோவிஷீல்டை பொறுத்தவரை,  கொரோனா தொற்றின் வகை பி.1. எதிராக 42.92 அளவு எதிர்ப்புசக்தியை உருவாக்குவதாகவும், கொரோனா தொற்றின் வகைக்கு  பி.1.617 க்கு எதிராக  21.9 அளவே எதிர்ப்புசக்தியை உருவாக்குவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணம் வழங்கிய காங்கிரஸ் தலைவரை விசாரிக்கும் காவல்துறை : பிரதமரின் கோழைத்தனமென காங்கிரஸ் கண்டனம்

இங்கிலாந்தில் பரவி வந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கிய எதிர்ப்புசக்தியை விட 6% குறைவாகவும்,  பிரேசிலில் பரவி வந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கிய எதிர்ப்புசக்தியை விட 50% குறைவாகவும் தான் தற்போது இந்தியாவில் பரவி வரும் பி.1.617 க்கு எதிராக தடுப்பூசிகள் எதிர்ப்புசக்தியை வழங்குவதாக தி இந்துவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்