உச்சநீதிமன்றத்தின் வெளிப்படையான ஒப்புதலை பெறாமல், அகில இந்திய மருத்துவத்திற்கான இடங்களில் பொருளாதாரத்தில் நலவடைந்தவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வழங்கிய இருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூலை 29 ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பட்டியலினத்தவர்களுக்கு 15 விழுக்காடு, பழங்குடியினர்க்கு 7.5 விழுக்காடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு ஆகிய இட ஒதுக்கீட்டை மட்டுமே அனுமதிக்கிறது என தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வழங்கப்படும் உள் ஒதுக்கீடும் சட்டத்திற்கு உட்பட்டே உள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீடு வழங்கியதை ஏற்க முடியாது என அவர் உத்தரவிட்டனர்.
ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், அகில இந்திய மருத்துவ இடங்களில் 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற்று இருக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.