Aran Sei

பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறரை பணியமர்த்தக்கூடாது – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

திக மதிப்பெண் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர் மரபு (DNC) பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை பொதுப்பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அவர்களை வைத்துப் பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட காலி இடங்களை நிரப்பக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பட்டியல் பிரிவினருக்கான காலி இடங்களைத் தகுதிவாய்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபு விண்ணப்பதாரர்களை கொண்டு நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் தற்கொலை – மரணத்தில் சந்தேகம் இருப்பதாக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து கே.ஆர். சாந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் செயல் தவறானது என்றும்,  தகுதியான ஆட்களைக் கொண்டு பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட  காலியான இடங்களை நிரப்புவதற்கு  பதிலாக, பொது பட்டியலில் (general category) உள்ள இடங்களைக் கொண்டு நிரப்ப  வேண்டும் என்று  தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 9 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘பாம்பே பேகம்ஸ் தொடரை நிறுத்த வேண்டும்’ – நெட்ஃப்லிக்ஸிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேண்டுகோள்

“பொது தகுதி பட்டியல் முதலில் நிரப்பப்பட வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடஒதுக்கீடு பிரிவில் உள்ள காலியிடங்கள் நிரப்ப வேண்டும். அதன் பின், நடப்பாண்டுக்கான மீதமுள்ள இடங்களை நிரப்ப வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட முதுநிலை வேதியியல் உதவியாளர்களுக்கான காலியிடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் விண்ணப்பதாரர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு தவறானது என உயர் நீதிமன்றத்தின் கருத்தை அமோதிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்