பீமா கோரேகான் வழக்கில் கைதாக தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள 82 வயதான எழுத்தாளர் வரவர ராவ் புதிய மருத்துவ அறிக்கைகள் ஜனவரி 28 ஆம் தேதி காலை சமர்ப்பிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிட்டாலே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வரவர ராவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை விசாரித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது மனுவாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்பை உரிமை பிரிவு 21-ஐ (உயிர் மற்றும் தனிப்பட்ட உடைமை பாதுகாப்பு) மீறும் விதமாக சிறை நிர்வாகத்தால், வரவர ராவிற்கு மருத்து உதவிகள் மறுக்கப்பட்டுள்ளது என அறிவிக்க கோரி வரவர ராவ்வின் மனைவி ஹேமா கோரிக்கை வைத்துள்ளதாக அதில் கூறிப்பட்டுள்ளது.
இரண்டாவது மனுவாக, மருத்துவ காரணங்களுக்காக வரவர ராவ்விற்கு ஜாமீன் வழங்க கோரியும், மூன்றாவது மனுவாக, அமர்வு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட ஜாமீன் மனுவை எதிர்த்து மேல் முறையீடு செய்தும் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.
தி இந்து வெளியிட்டள்ள செய்தியின்படி, தேசிய புலனாய்வு முகமை (NIA), சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், தனியார் மருத்துவமனை சமர்ப்பித்த முதல் மற்றும் கடைசி அறிக்கையின் படி “மருத்துவ அடிப்படையில், ஜனவரி 9 வரை வரவர ராவ் நன்றாக இருக்கிறார். அவரது முக்கிய உடல் உறுப்புகள் சீராக இருக்கிறது” என கூறியுள்ளார்.
‘கவிஞர்களால் சிறையை நிரப்பாதீர்கள்’ – வரவர ராவ் விடுதலைக்கு இஸ்ரேலிய கவிஞர்களின் குரல்
மருத்துவ அறிக்கை அவருக்கு டிமென்சியா இருப்பதாக குறிப்பிடப்படவில்லை என அனில் சிங் தெரிவித்திருப்பதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெ.ஜெ மருத்துவமனை மற்றும் தலோஜா சிறைச்சாலை மருத்துவமனை அறிக்கை, ஆகியவற்றில் டிமென்சியா பற்றி குறிப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதாகவும், எனவே ஜனவரி 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு, நானாவதி மருத்துவமனையின் புதிய மருத்துவ அறிக்கையை சமர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தி ஹிந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.