Aran Sei

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : பிரக்யா சிங் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு – சிறப்பு நீதிமன்றம்

credits : scroll

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மும்பையிலிருந்து 200 கிமீ தொலைவில் இருக்கும் மாலேகான் எனும் பகுதியில் உள்ள மசூதியின் அருகே குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர், லெஃப்டினண்ட் கர்னல் பிரசாத் புரோஹித், சமீர் குல்கர்னி, ரமேஷ் உபத்யாய், சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கார், சுதாகர் திவேவேதி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

“சூத்திரர்கள் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்” – பிரக்யா சிங் தாக்கூர்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA), பிரிவுகள் 16 (திவீரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்), 18 (தீவிரவாத நடவடிக்கைகளுக்கான சதித்திட்டம் தீட்டுதல்) ஆகியவற்றின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120 பி (குற்றம் செய்ய சதி திட்டம் தீட்டுதல்), 302 (கொலை), 307 (கொலை செய்ய முயற்சி செய்தல்), 324 (திட்டமிட்டு ஆபத்தை ஏற்படுத்துதல்), 153 ஏ (இரண்டு சமுதாயங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறையிலும் மனுநீதி : சாதிரீதியாக வேலைப் பிரிவினை – புலிட்சர் மையம் அறிக்கை

இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூரின் உடல்நிலை பாதிப்படைந்து இருப்பதால் மத்திய பிரதசேத்திலிருந்து மும்பைக்கு பயணம் செய்ய முடியாது எனவும் அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் வழக்கு விசாரணைக்காக தொடர்ச்சியாக நேரில் ஆஜரவாதிலிருந்து விலக்கு கோரி தாக்கூரின் வழக்கறிஞர் அவினாஷ் ரசல் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சித்ரே, தாக்கூரினுடைய மனுவிற்கு ஒப்புதல் அளித்து, அவர் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்